ஏடிஎம் மைய வாசலில் மனைவி திடீர் மாயம்: கணவன் புகார்
சென்னை: ஏடிஎம் மையத்தில் பணம் எடுப்பதற்காக உள்ளே சென்ற நேரத்தில், வாசலில் காத்திருந்த மனைவியை காணவில்லை என்று கணவன் புகார் கொடுத்துள்ளார்.
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் வரதராஜன். அண்ணா பல்கலைக் கழகத்தில் பி.டெக் படித்துக்கொண்டு சென்னை, துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி தரணி (22). திருமணம் ஆகி ஓராண்டு மட்டுமே ஆகிறது. இருவரும் தனித்தனியே வசித்து வருகின்றனர்.
பெரம்பூரில் அண்ணன் வீட்டில் தரணி தங்கி இருந்தார். வரதராஜன் 10 நாட்களுக்கு ஒரு முறை பெரம்பூருக்கு வந்து மனைவியை பார்த்து செல்வார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இருவரும் ஹோட்டலுக்கு சாப்பிட புறப்பட்டனர். பெரம்பூர் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுப்பதற்காக மனைவியை வெளியே நிறுத்தி விட்டு வரதராஜன் பணம் எடுக்க சென்றார்.
பணம் எடுத்து விட்டு வெளியே வந்து பார்த்த போது மனைவியை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. பெரம்பூர் ரயில்வே போலீசில் வரதராஜன் புகார் செய்தார். போலீசார் தரணியை தேடி வருகிறார்கள்.
தரணியை யாரும் கடத்தி சென்றார்களா? அல்லது கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக மாயமானாரா என்ற கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications