போதை மருந்து கொடுத்து மாணவி கற்பழிப்பு - மாணவருக்கு வலை
நெல்லை: நெல்லை அருகே போதை மாத்திரை கொடுத்து மாணவியை கற்பழித்த மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை தச்சநல்லூர் சிதம்பர நகரை சேர்ந்தவர் ஜெபராணி. டவுனில் உள்ள டூடோரியலில் பிளஸ் டூ படித்து வந்தார்.
அப்போது ஜெபராணிக்கும் அங்கு படி்த்து வந்த மானூர் களக்குடியை சேர்ந்த நாகராஜ பெருமாள் என்ற மாணவனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
நாகராஜ பெருமாள் திருமணம் செய்து கொள்வதாக கூறி பல்வேறு இடங்களுக்கு ஜெபராணியை அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். அதன்பிறகு திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.
இதுகுறித்து தச்சநல்லூர் போலீசில் ஜெபராணி புகார் செய்தார். அதில் நாகராஜபெருமாள் சிவகாசியில் உள்ள அவரது நண்பர் தங்கியிருந்த அறைக்கு அழைத்து சென்றதாகவும், அங்கு போதை மாத்திரை கொடுத்து தான் மயங்கிய பின் பாலியல் பலத்காரம் செய்ததாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து போலீசார் நாகராஜபெருமாளை தேடி வருகின்றனர். ஜெபராணியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications