சீனா-ரஷ்யா- வடகொரியா எல்லையில் பயங்கர பூகம்பம்

Subscribe to Oneindia Tamil

quake
பெய்ஜிங்: வடகிழக்கு ஆசியாவில் சீனா, ரஷ்யா மற்றும் வடகொரியா எல்லைப் பகுதியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 6.7 என பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத் தகவல் தெரிவிக்கிறது.

ரஷ்யாவின் பசிபிக் கடல் பகுதியில் விளாடிவோஸ்க் நகரில் இருந்து மேற்கு-தென்மேற்கு திசையில் 98 கி.மீ தொலைவிலும், சீனாவின் ஜிலின் மாகாணத்தில் உள்ள யாஞ்சி நகரத்தில் இருந்து கிழக்கே 110 கி.மீ தொலைவையும் மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பூகம்பத்தின் தாக்கம் பெய்ஜிங் வரை உணரப்பட்டுள்ளது. ஜெய்ஜிங்கில் உள்ள வணிக வளாகங்களில் சில வினாடிகள் லேசான அதிர்வை உணர்ந்ததாக மக்கள் தெரிவித்தனர்.

எனினும் இந்த பூகம்பத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. பாதிப்புகள் எதுவும் ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை என்று கொரியாவின் பூகம்ப ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+