மார்க்சிஸ்ட் தலைவர் டபுள்யூ.ஆர். வரதராஜன் ஒருவாரமாக மாயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான டபிள்யூ.ஆர். வரதராஜனை கடந்த ஒரு வாரமாகக் காணவில்லை. அவரைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சென்னை அண்ணாநகர் சாந்தி காலனி 4வது அவென்யூ 10வது மெயின் ரோட்டில் இவரது வீடு உள்ளது. வரதராஜனின் மனைவி சரஸ்வதி ரிசர்வ் வங்கியில் பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்கு 2 மகன்களும் உள்ளனர். ஒரு மகன் அமெரிக்காவிலும், இன்னொருவர் சேலத்திலும் உள்ளனர்.

இந் நிலையில் ஒரு வாரமாக வரதராஜனைக் காணவில்லை. அவரது செல்போன் சுவீட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவரது மனைவி சரஸ்வதியின் புகார் மனுவை கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் டிஜிபியிடம் கொடுத்துள்ளனர்.

முன்னதாக அவர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவரை பொறுப்பில் இருந்து கட்சி நீக்கியதாகத் தெரிகிறது.

இந் நிலையில் தனது உள்வாழ்க்கையில் தோல்வி ஏற்பட்டுவிட்டதாகக் கூறி இரு கடிதங்களை எழுதி வைத்துவிட்டு அவர் மாயமாகியுள்ளார்.

தனிப்படைகள் அமைத்து அவரைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அவர் சென்னை வில்லிவாக்கம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+