மின்னணு வாக்குப் பதிவு எந்திரக் குறைகள் - களையக் கோரி சாமி வழக்கு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் உள்ள கறைகளைக் களையுமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் குறைகளே இல்லை; அதில் தவறுகள் நடக்க வாய்ப்பே இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஆனால் தேர்தல் ஆணையத்தின் கூற்று தவறானது.

நியாயமான, தெளிவான முறையில் தேர்தல் நடக்க மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன், வாக்குச்சீட்டு முறையையும் கடைபிடிக்கவேண்டும். ஆனால் எனது கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

வாக்குப்பதிவு எந்திரத்தில் தவறுகள் நடக்க வாய்ப்பே இல்லை என்று கூற இயலாது. வாக்குப் பதிவு எந்திரத்தில் உள்ள குறைகளை நீக்குவதற்கு ஆணையம் முன்வரவேண்டும்.

வாக்குப்பதிவு எந்திரம் இணையற்ற சாதனம் அல்ல. ஏனெனில் உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு முன் வாக்குப்பதிவு எந்திரத்தின் காப்புரிமைக்காக விண்ணப்பித்திருந்த பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், பின்னர் அந்த விண்ணப்பத்தை வாபஸ் பெற்றுக் கொண்டது என்று கூறியுள்ளார் சாமி.

மனுவைப் பரிசீலித்த உயர்நீதி்மன்றம் அதை விசாரணக்கு ஏற்றது. பின்னர் ஏப்ரல் 14ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+