பொதுத் தேர்வு - மாணவர்கள் ஷூ, சாக்ஸ், பெல்ட் போட்டு வரத் தடை
சென்னை: பிளஸ்டூ மற்றும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுதும் மாணவர்கள், தேர்வு ஹாலுக்குள் ஷூ, சாக்ஸ், பெல்ட் அணிந்தபடி வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 1ம் தேதி பிளஸ்டூ பொதுத் தேர்வு தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து பத்தாம் வகுப்புத் தேர்வு தொடங்குகிறது.
தேர்வின்போது மாணவர்கள் காப்பி அடிப்பது, பிட் அடிப்பது உள்ளிட்டவற்றை தடுக்கும் முகமாக பல்வேறு நடவடிக்கைகளை அரசு தேர்வுகள் இயக்குநரகம் எடுத்து வருகிறது.
இதுதொடர்பாக தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு கையேடு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதில் தேர்வின்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.
அதில் தேர்வு ஹாலுக்குள் மாணவர்கள் பெல்ட், ஷூ, சாக்ஸ் போன்றவற்றுடன் வரக் கூடாது, ஷூ, பெல்ட், சாக்ஸ் அணிந்து வந்தால் அவற்றை கழற்றி அறைக்கு வெளியே வைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், விலை உயர்ந்த கைக் கடிகாரங்களையும் மாணவர்கள் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல செல்போன்கள், கால்குலேட்டர்கள், துண்டுத் தாள்கள் உள்ளிட்டவற்றையும் கொண்டு வரக் கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications