733 உள்ளாட்சி காலியிடங்களுக்கு விரைவில் தேர்தல்
நெல்லை தமிழகத்தில் உள்ளாட்சிகளில் காலியாக உள்ள 733 இடங்களுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் தெரிவித்தார்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத் தேர்தல் நடத்துவது தொடர்பாக பிடிஓக்கள் மற்றும் உள்ளாட்சி துறை அதிகாரிகளுடன் நெல்லையில் சந்திரசேகரன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் 31.1.2010 வரை உள்ளாட்சிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஊரக பகுதிகளில் 652 இடங்களுக்கும், நகர்புற பகுதிகளில் 81 இடங்களுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும்.
இதற்கான குறிப்புகள் மாவட்டங்களி்ல் இருந்து பெறப்பட்டு வருகின்றன. இதை தொடர்ந்து அனைத்து மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்களை அழைத்து பேசிய பின்னர் இடை தேர்தல் தேதி குறித்து முடிவெடுக்கப்படும்.
மாநிலம் முழுவதும் உரிய நேரத்தில் தேர்தல் கணக்கு தாக்கல் செய்யாத 3907 பேர் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, ஊரக பகுதிகளில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 962 பதவிகள் உள்ளன. கடந்த 5 இடை தேர்தலில் நகர்ப்புற தேர்தலுக்கு மட்டும் எலக்ட்ரானிக் ஓட்டு பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
வருகிற 2011 தேர்தலில் அனைத்து நகர்ப்புற தேர்தலுக்கும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும். இதற்காக ரூ.20 கோடி மதிப்பிலான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாங்கப்பட உள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தல்களுக்கும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் தேர்தல் நடத்துவதற்கான இயந்திரத்தை பெங்களூருவை சேர்ந்த பாரத மிகுமின் நிலையம் (பெல்) வடிவமைத்துள்ளது. இதற்காக 1 லட்சத்து 20 ஆயிரம் ஓட்டு பதிவு இயந்திரங்கள் தேவைப்படும். எனவே அரசிடம் ரூ.196 கோடி நிதி ஓதுக்கீடு கேட்டுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications