நாளை கூடுகிறது திமுக செயற்குழு, பொதுக்குழு

நாளை காலை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.
காலை 9 மணிக்கு தலைமை செயற்குழு கூட்டம் நடக்கிறது. இதில் பொதுக் குழுவிற்கான தீர்மானங்களை பரிந்துரைப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
காலை 10 மணிக்கு பொதுக்குழு கூடுகிறது. இதில் அரசியல் நிலவரம், கட்சி வளர்ச்சி உள்பட பல்வேறு கருத்துக்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகிறது.
குடிசைகளுக்கு பதிலாக கான்கிரீட் வீடுகளை கட்டும் கலைஞர் வீட்டு வசதி திட்டம், கலைஞர் காப்பீட்டு திட்டம், இலவச ஆம்புலன்சு 108 திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு பாராட்டு தெரிவித்தும், இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க வற்புறுத்துவது உள்பட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications