191 டன் தங்கத்தை விற்கிறது ஐஎம்எப்!

தனது உறுப்பு நாடுகளுக்கு கடன் வழங்குவதற்கு அதிக நிதி தேவைப்படுவதால், தங்கத்தை விற்பனை செய்ய ஐஎம்எப் முடிவு செய்து கடந்த ஆண்டிலிருந்து அமல்படுத்தி வருகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் ஐஎம்எப் 403 டன் தங்கத்தை விற்பனை செய்தது. இதன் மூலம் கிடைத்த நிதியை ஏழை நாடுகளின் வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு கடனாக வழங்கியது. அடுத்து 212 டன் தங்கத்தை ஐஎம்எப் விற்பனை செய்துள்ளது. இதில் இந்திய ரிசர்வ் வங்கி மட்டுமே கடந்த ஆண்டு 200 டன் தங்கத்தை வாங்கியது. எஞ்சிய 12 டன் தங்கத்தை இலங்கை, மோரீஷஸ் ஆகிய நாடுகள் வாங்கின.
இப்போது ஐஎம்எப் வசம் மேலும் 191 டன் தங்கம் மிஞ்சியுள்ளது. இதையும் விற்பனை செய்ய முடிவு செய்து அதற்கான பணியைத் தொடங்கியுள்ளது ஐஎம்எப்.
ஒரே தவணையில் தங்கத்தை விற்பனை செய்தால் அது தங்கத்தின் விலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இதைக் கருத்தில் கொண்டு படிப்படியாக விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
மத்திய வங்கிகள் ஆர்வம் காட்டவில்லை...
இதற்கு முன் தங்கத்தை ஒரு அவுன்ஸ் 1050 முதல் 1100 டாலருக்கு விற்றது ஐஎம்எப்.
இந்தியா அவுன்ஸ் 1050 டாலர் என்ற விலையில்தான் 200 டன் தங்கம் வாங்கியது. ஆனால் இப்போதைய விலை எவ்வளவு என்று இன்னும் ஐஎம்எப் அறிவிக்கவில்லை.
இன்னொரு பக்கம், ஐஎம்எப் இப்போது விற்க முன்வந்துள்ள தங்கத்தை வாங்க மத்திய வங்கிகள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சீன மத்திய வங்கி, ஐஎம்எப் தங்கத்தை விட, உள்நாட்டிலேயே தங்கத்தை வாங்கி இருப்பு வைப்பதில்தான் ஆர்வம் காட்டுகிறது. இன்றைய தேதிக்கு 1054 டன்கள்.
இன்றைய சூழலில் இந்திய ரிசர்வ் வங்கி மட்டுமே ஐஎம்எப் தங்கத்தை வாங்க ஆர்வம் காட்டுகிறது.
எனவே ஐஎம்எப்பின் இந்த ஆண்டு தங்க விற்பனை முந்தைய ஆண்டுகளைப் போல பரபரப்பாக இருக்காது என்கிறார்கள் சர்வதேச நிதியியல் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications