மர்மக் காய்ச்சலுக்கு என்.எஸ்.ஜி. துணை கமாண்டர் பலி
சங்கரன்கோவில்: மர்மக் காய்ச்சலுக்கு தேசிய பாதுகாப்புப் படை துணை கமாண்டர் உயிரிழந்தார்.
சங்கரன்கோவில் அருகேயுள்ள ரங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த மாடசாமி மகன் திராவிடமணி. இவர் தேசிய பாதுகாப்பு படையின் துணை கமாண்டராக சென்னையில் பணியாற்றி வந்தார்.
மனைவி விஜயலெட்சுமி, மகள் திவ்யா (3), மகன் விக்னேஷ்(2) ஆகியோருடன் அங்கேயே வசித்து வந்தார். இந்த நிலையில், திராவிடமணிக்கு மர்மக் காய்ச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இறந்தார்.
அவரது உடலை கமாண்டோ படை இன்ஸ்பெக்டர் நாயர், சப்-இன்ஸ்பெக்டர் வாசு, மற்றும் வீரர்கள் சொந்த ஊரான சங்கரன்கோவில் அருகே உள்ள தாசையா நகருக்கு நேற்று கொண்டு வந்தனர்.
அவரது உடலுக்கு முன்னாள் அமைச்சர் தங்கவேலு, யூனியன் சேர்மன் அன்புமணி கணேசன், அறம் அறக்கட்டளை நிறுவனர் இன்பராஜ், மகளிர் குழு பிரதிநிதி ஞானஸ்வேரி மற்றும் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
சங்கரன்கோவில் தாலுகா இன்ஸ்பெக்டர் கிறிஸ்டின் ஜெயசில் தலைமையில் ஆயுதப்படை போலீசார் 24 குண்டுகள் முழுங்க மரியாதை செலுத்திய பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications