சிபுசோரனின் உதவியாளர் வீட்டில் ரூ.50 கோடி சொத்து ஆவணம் பறிமுதல்
ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் சிபுசோரனின் உதவியாளர் வீட்டில் நடத்திய சோதனையின் மூலம் வருமானத்துக்கு அதிகமாக ரூ.50 கோடிக்கும் மேல் சொத்து சேர்த்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக ரூ.4 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழலில் ஈடுபட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஜார்க்கண்ட முன்னாள் முதல்வர் மதுகோடா.
இவ்வழக்கு தொடர்பாக வருமான வரித்துறையினர் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்கில் தொடர்புடைய அனைத்து நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனைகள் நடந்து வருகின்றன.
மதுகோடா முதல்வராக இருந்த போது அவரிடம் உதவியாளராக இருந்த மனோகர் என்பவர் தற்போதைய முதல்வர் சிபுசோரனுக்கும் உதவியாளராக உள்ளார்.
இதனால் இவரின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மனோகர் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் சொத்துக்களில் ரூ.50 கோடி முதலீடு செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications