பாபநாசம் அணையில் மூழ்கி 2 உ.பி வாலிபர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
பாபநாசம்: உ.பி. மாநிலத்தை சேர்ந்த 2 பேர் பாபநாசம் தலையணையில் குடி போதையில் மூழ்கி இறந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் விராக் மாவட்டம் கத்தி கிராமத்தை சேர்ந்த ஜெயகிரி மகன் தேவேந்திரகிரி, கார்கோதி மாவட்டம் நாராயணதேவ் கிராமத்தை சேர்ந்த விஜின் குமார் மற்றும் உ.பி.யை சேர்ந்த 15 பேர் வேலை தேடி அம்பை ஆசிரியர் நகர் காலனியில் வீடு எடுத்து தங்கியுள்ளனர்.
இதில் தேவேந்திர கிரியும், விஜின்குமாரும், நேற்று முன்தினம் மாலை பாபநாசம் தலையணைக்கு சென்று மது அருந்தி விட்டு குளித்துக் கொண்டிருந்தனர்.
இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் சக நண்பர்கள் அம்பை போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் நேற்று காலை பாபநாசம் தலையணைக்கு சென்று தேடினர். அங்கு தேவேந்திர கிரி, விஜின் குமார் உடல் மீட்கப்பட்டது.












Click it and Unblock the Notifications