ஆம்புலன்ஸுக்கு வழி விடாவிட்டால் நடவடிக்கை: போலீஸ்
சென்னை: போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்சுக்கு வழி விடாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை மாநகர சாலைகளில் மின்னல் வேகத்தில் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு பெரும்பாலான வாகனங்கள் வழிவிடுவதில்லை.
இதனால் ஆம்புலன்சில் உயிருக்கு போராடும் நோயாளியை குறிப்பிட்ட நேரத்தில் மருத்துமவனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது.
இதனால், ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழி விடுங்கள் என்ற தலைப்பில் விழிப்புண்வு நடைபயணம் நடைபெற்றது.
மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகில் இருந்து தொடங்கிய இந்த நடைபயணத்தை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், 'ஆம்புலன்சின் சைரன் சத்தம் கேட்டவுடன் முன்னால் செல்லும் வாகனங்கள் இடது புறமாக ஒதுங்கி வழிவிடவேண்டும்.
போக்குவரத்து நெரிசலில் தடையின்றி ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல அனுமதிக்க வேண்டும்.
அதே நேரத்தில் பின்னால் வரும் வாகனங்கள் ஆம்புலன்சை முந்திச்செல்ல கூடாது. அப்படி முந்திச்செல்லும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.












Click it and Unblock the Notifications