மேட்டுப்பாளையம் மாணவர்களின் 91 நாள் போராட்டம் வாபஸ்!

Subscribe to Oneindia Tamil

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்பதாக அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதை அடுத்து மாணவர்களின் 91 நாள் போராட்டம் வாபஸ் பெற்றப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், அரசு வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் உள்ளது.

இதில் வனவியல் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்லூரியில் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வனச்சரகர் பதவிக்கு வனவியல் பட்டப்படிப்பு படித்தவர்களை மட்டுமே பணியில் அமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 2009ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இது தொடர்பாக, மாவட்ட கலெக்டர், மத்திய அமைச்சர் ராசா மற்றும் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோரிடம் மனு அளித்தனர்.

இந்த நிலையில், எதிர்காலத்தில் வனவியல் பட்டதாரிகள் மட்டுமே வனசரகர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர் என்று அரசு தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இதனையடுத்து தங்களது 91 நாள் போராட்டத்தை மாணவர்கள் வாபஸ் பெற்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+