மலேசியாவில் தவித்த 18 தமிழர்கள் பத்திரமாக சென்னை திரும்பினர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மலேசியாவில் கார்பெட் தொழிற்சாலை மூடப்பட்டதால் வேலையின்றி தவித்த 18 வாலிபர்கள் சென்னை வந்து சேர்ந்தனர்.

மதுரை, ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் இருந்து 18 வாலிபர்கள், கார்பெட் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்ப்பதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மலேசியா சென்றனர்.

மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் சம்பளம், தங்குமிடம், உணவு இலவசம் என கூறி இவர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.
அங்கு சென்றபின் முதல் 2 மாதம் சம்பளம் கிடைக்கவில்லை. அதன் பின்னர் மாத சம்பளம் ரூ.10 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொழிற்சாலையும் மூடப்பட்டு விட்டது. இதனால் 18 பேரும் கையில் பணமின்றி மலேசியாவில் சுற்றித் திரிந்தனர்.

இந்நிலையில் 18 பேரும், தங்கள் உறவினர்களுக்கு கடிதம் எழுதி பணத்தை பெற்று மலேசியாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+