மூளைச் சாவு ஏற்பட்ட 12 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மூளைச் சாவு காரணமாக உயிரிழந்த 12 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த நெசவுத் தொழிலாளி சின்னதம்பியின் மகன் விஜய் (12). சென்னையில் பார்வையற்றோர் நடத்தும் நடமாடும் இன்னிசை கச்சேரி குழுவில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் சிறுவன் விஜய், வாலாஜா சாலை பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, மோட்டார் சைக்கிள் மோதி பலத்த காயமடைந்தார்.

உயிருக்கு போராடிய நிலையில் சிறுவனுக்கு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு விஜய்க்கு மூளை சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து மருத்துவர்கள் சிறுவனின் பெற்றோரை அழைத்து நிலைமையை எடுத்துத்கூறி, 'இனி விஜய் பிழைக்க மாட்டார். உடல் உறுப்புகளை தானம் செய்வது நல்லது. இதனால் பலருக்கு மறுவாழ்வு கிடைக்கும்' என்று தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து, விஜயின் 2 கண்கள், 2 சிறுநீரகம், இதய வால்வு, ஈரல் போன்ற உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன் வந்தனர்.

உடனடியாக சிறுவனின் உடல் உறுப்புகள் தானமாக எடுக்கப்பட்டது. இந்த உறுப்புகள் உயிருக்காக போராடுபவர்களுக்காக பொருத்தப்பட உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+