கோட்டைக்குள் புகுந்த மர்ம லாரி - 5 போலீஸார் சஸ்பெண்ட்
சென்னை: தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திறகுள் ஒரு மர்ம லாரி நேற்று இரவு புகுந்து விட்டது. இதையடுத்து பாதுகாப்புப் பணியில் கோட்டை விட்டதற்காக 5 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று நள்ளிரவில் ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை வழியாக அண்ணா சதுக்கம் நோக்கி ஒரு லாரி வேகமாக சென்றது. அப்போது அந்த லாரி திடீரென தலைமைச் செயலகத்திற்குள் புகுந்து விட்டது.
இதையடுத்து விரைந்து சென்ற போலீஸார் அந்த லாரியை சூழ்ந்தனர். டிரைவர் ஐயப்பன் என்பவரை கீழே இறக்கினர்.
அப்போது அவர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தலைமைச் செயலகத்திற்குள் லாரி நுழைந்து நிற்கும் அளவுக்கு பாதுகாப்பில் கவனக்குறைவாக இருந்ததற்காக இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், எஸ்.ஐ. தனலட்சுமி, போலீஸ்காரர்கள் சுகுமார், ஜெயச்சந்திரன், ஜனநாதன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications