கோர்ட்டில் ஆஜராகாத 2 இன்ஸ்பெக்டர்களுக்கு பிடிவாரண்ட்
சிவகிரி: வழக்கில் ஆஜாராகாத 2 இன்ஸ்பெக்டர்களுக்கு சிவகிரி கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
புளியங்குடி ராமசாமி நாயக்கர் தெருவை சேர்ந்தவர் சிவசங்கர சுப்பிரமணியன். இவர் கடந்த 1994ல் பாம்புகோவில் சந்தை ரோட்டில் நெல்லை தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் ரூ.8.5 லட்சம், சொந்த பணம் ரூ.13.5 லட்சத்தில் நவீன அரிசி ஆலை கட்டினார். அதன் பிறகு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பகுதி பங்கை விற்க முடிவு செய்தார்.
அப்போது டிஎன் புதுக்குடி செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த முருகேசன், அவரது மனைவி பூமாரி, ஆகியோர் அரிசி ஆலையை தாங்கள் வாங்கி கொள்வதுடன் கடனை செலுத்தி விடுவதாகவும், மேலும் ரூ.4 லட்சத்து 64 ஆயிரத்தை கொடுப்பதாகவும் கூறியுள்ளனர்.
ஆனால் அதில் ரூ.39 ஆயிரம் மட்டும் சிவசங்கர சுப்பிரமணியனிடம் கொடுத்துள்ளனர். மேலும் தொழில் முதலீட்டு கழகத்தில் அவர் வாங்கிய கடனையும் செலுத்தவில்லை.
இதையடுத்து தொழில் முதலீட்டு கழகம் 2003ல் அரிசி ஆலையை ரூ.10 லட்சத்து 67 ஆயிரத்துக்கு ஏலம் முலம் விற்பனை செய்தது. அதனை முருகேசன், பூமாரி தம்பதியினர் வாங்கினர்.
குறைந்த விலைக்கு ஏலம் விட்டதால் தனக்கு பொருளாதார ரீதியில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அரிசி ஆலையை வாங்குவதாக கூறி கடனை செலுத்தாமல் மோசடி செய்ததாக கணவன்-மனைவி மீது சிவசங்கர சுப்பிரமணியன் சிவகிரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு விசாரணையில் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயக்கொடி, ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் நாகராஜன், ஆகியோர் ஆஜாராகவில்லை. இதையடுத்து நீதிபதி ஜெகநாதன் 2 இன்ஸ்பெக்டர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications