தேசிய ஜனநாயக கூட்டணி: வாஜ்பாய் 'நாற்காலியில்' அத்வானி!
டெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல் தலைவராக முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்குப் பதிலாக அத்வானியை நியமித்துள்ளது பாஜக.
வாஜ்பாய் உடல்நலம் பெற்று மீண்டும் கட்சிப் பணிக்குத் திரும்பும்வரை இந்தப் பதவியில் அத்வானி நீடிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த எம்பிக்கள் கூட்டம் டெல்லியில் நடந்தது. அதில் கூட்டணியின் செயல் தலைவர் பதவிக்கு அத்வானியின் பெயரை ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் முன்மொழிந்தார்.
இதை பாஜக தலைவர் நிதின் கட்காரி, சிவசேனைத் தலைவர் மனோகர் ஜோஷி, சிரோமணி அகாலி தளம் தலைவர் நரேஷ் குஜ்ரால் ஆகியோர் வழிமொழிந்தனர். இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல் தலைவராக அத்வானி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பாஜக மூத்தத் தலைவர் வாஜ்பாய் உடல்நலம் பெற்று மீண்டும் கட்சிப் பணிக்குத் திரும்பும்வரை இப்பதவியில் அத்வானி நீடிப்பாராம்.
இதையடுத்து கூட்டணியின் அமைப்பாளர் பதவிக்கு சரத் யாதவின் பெயரை பாஜக தலைவர்களில் ஒருவரான சுஷ்மா ஸ்வராஜ் முன்மொழிந்தார். இதை நிதின் கட்காரி, மனோகர் ஜோஷி, நரேஷ் குஜ்ரால் ஆகியோர் வழிமொழிந்தனர். இதையடுத்து சரத் யாதவ் அமைப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஒரு கட்டத்தில் கிட்டத்தட்ட 18 கட்சிகள் இடம் பெற்றிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இப்போது பேர் சொல்லிக் கொள்ளும் வகையில் 4 கட்சிகளே உள்ளது குறிப்பிடத்தக்கது.
பதவியை ராஜினாமா செய்தார் வசுந்தரா:
இந் நிலையில் ராஜஸ்தான் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக இருந்த வசுந்தரா ராஜே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அவர் ஒப்படைத்தார்.
ராஜஸ்தானில் கடந்த சட்டமன்ற, மக்களவைத் தேர்தல்களில் பாஜக படுதோல்வி அடைந்தது. இதையடுத்து முதல்வராக இருந்த வசுந்தரா ராஜே ராஜஸ்தான் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றார்.
ஆனால் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று அவரை பதவி விலகுமாறு பாஜக முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங் உள்பட கட்சி மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
அதே நேரத்தில் தேசிய அளவிலான தோல்விக்கு பொறுப்பேற்று ராஜ்நாத் சிங், அத்வானி, அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் எந்தப் பொறுப்புகளில் இருந்தும் விலகாததால் தான் மட்டும் ஏன் பதவி விலக வேண்டும் என்று கேட்டு வந்தார் வசுந்தரா.
மேலும் அவருக்கு பாஜக எம்எல்ஏக்கள் பெரும்பாலானோர் ஆதரவு அளித்ததால் கட்சிக்குள் குழப்பம் நீடித்தது.
இந்நிலையில் இன்று திடீரென்று ராஜஸ்தான் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக இருந்த வசுந்தரா ராஜே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications