ரூ.93 கோடி சொத்து சேர்த்த ஐஏஎஸ் அதிகாரி சிக்கினார்!
ராய்ப்பூர்: வருமானத்துக்கு அதிகமாக ரூ.93 கோடி சொத்து சேர்த்த ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி பி.எல்.அகர்வால். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்ததை அடுத்து கடந்த 4ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் இவரின் வீடு மற்றும் வர்த்தக நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது உறுதியானதை அடுத்து சட்டீஸ்கர் அரசு இவரை பணியில் இருந்து நீக்கியது. பின்னர் கடந்த 10ம் தேதி இவர் மீதான வழக்கு பொருளாதார குற்றப்புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து இந்த ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 1988ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வான, இவர் ஊழல் செய்து சேர்த்த சொத்துக்களின் மதிப்பு ரூ.93 கோடி என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தனது உறவினர் மற்றும் பினாமிகளின் பெயர்களில் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் இவர், உருக்கு தொழிற்சாலை ஒன்றில் ரூ.60 கோடி முதலீடு செய்துள்ளார்.
அவரின் ஒரு வீட்டிலிருந்து மட்டும், ரொக்கமாக ரூ.68 லட்சம் பணமும், ரூ. 70 லட்சம் மதிப்பிலான நகைகளும், ரூ.8 கோடி மதிப்பிலான முதலீட்டு பத்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவை தவிர பல வங்கி லாக்கர்களில் இவர் மேலும் நகைகள், பத்திரங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை குவித்து வைத்துள்ளார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications