இந்தியாவுடன் பேச்சுவார்த்தை- 5 பேர் கொண்ட பாக். குழு வருகிறது
டெல்லி: இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் நிரூபமா ராவுடன் பேச்சுவார்த்தை நடத்த, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் சல்மான் பஷீர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு டெல்லி வரவுள்ளது.
பிப்ரவரி 25ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இதில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தானிலிருந்து பஷீர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு டெல்லி வருகிறது. பாகிஸ்தான் தூதுக் குழுவில் அந்நாட்டு வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அப்துல் பாசித்தும் இடம் பெறுகிறார்.
ஒரு நாளைக்கு முன்னதாக டெல்லி வரும் பாகிஸ்தான் குழு 26ம் தேதி பாகிஸ்தான் கிளம்பிச் செல்லும்.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இரு நாடுகளின் சார்பில் கூட்டறிக்கை விடப்படுமா அல்லது இரு நாடுகளின் வெளியுறவுத்துறைச் செயலாளர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்திப்பார்களா என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இருப்பினும் இரு தரப்பும் தனித் தனியாக செய்தியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் குழு, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்திக்கும் திட்டம் இருப்பதாக தெரியவில்லை. இதுதொடர்பாக கிருஷ்ணாவிடம் பாகிஸ்தான் தரப்பு நேரம் எதுவும் இதுவரை கேட்கவில்லை.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications