தமிழக உள்துறை செயலாளர் பெயரில் மோசடி செய்தவர் கைது!
மயிலாடுதுறை: தமிழக உள்துறை செயலாளர் மாலதியின் பெயரைப் பயன்படுத்தி, சீர்காழியில் முதியவரிடம் ரூ. 30,000 மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம் கொற்கையைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (65). இவர், தனது மகளை ஒருவர் கடத்திய வழக்கு தொடர்பாக வக்கீலை சந்திக்க கடந்த சில மாதங்களுக்கு முன் சீர்காழி வந்தார். அப்போது, அவர் புதிய பஸ் நிலையம் அருகே டீ குடித்துக் கொண்டிருந்தார்.
அங்கு வந்த உமாசங்கர், ராமமூர்த்தியிடம் தான் உள்துறை செயலாளர் மாலதியிடம் பணிபுரிவதா கூறி தன்னை அறிமுகம் செய்து கொண்டதோடு, அவரது மகளை கண்டுபிடித்து தர பேரம் பேசி 30,000 ரூபாயை ராமமூர்த்தியிடமிருந்து பெற்றுள்ளார்.
ஆனால், பணம் கொடுத்து பல நாளாகியும் காணாமல் போன பெண்ணும் வரவில்லை, பணம் வாங்கிச் சென்ற நபரிடமிருந்தும் தகவலும் இல்லை.
இதையடுத்து, ராமமூர்த்தி, உமாசங்கரிடம் தான் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் பணத்தை கொடுக்காமல் உமா சங்கர் அவரை அலைகழித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து ராமமூர்த்தி சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனையடுத்து, மோசடி பேர்வழி உமா சங்கர் மீது இன்ஸ்பெக்டர் முருகவேல் வழக்கு பதிந்து கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications