இந்து முன்னணி தலைவர் ராஜகோபாலன் கொலை வழக்கு- இன்று விசாரணை

Subscribe to Oneindia Tamil

நெல்லை: மதுரை இந்து முன்னணி தலைவர் ராஜகோபாலன் கொலை வழக்கு விசாரணை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று நடக்கிறது.

மதுரை இந்து முன்னணி தலைவர் ராஜகோபாலன் கடந்த 1994ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக கோவையை சேர்ந்த சாகுல் ஹமீது, ஜாகீர் உசேன், சுபைர், மதுரையை சேர்ந்த அப்துல்லா அஜீஸ், சீனி நைனா முகமது, ராஜா உசேன் ஆகியோர் அன்றைய தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீதான வழக்கு நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் (தடா சிறப்பு நீதிமன்றம்) நடந்து வருகிறது. இதில் சீனிநைனா முகமது மட்டும் ஜாமீனில் உள்ளார். மற்றவர்கள் கோவை மற்றும் சென்னை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

வழக்கு விசாரணைக்காக ஜாகீர் உசேன், சாகுல் ஹமீது உள்பட 6 பேர் நீதிமன்றத்தில ஆஜர் ஆகினர். நீதிபதி விஜயராகவன் விசாரணையை பிப் 22ம் தேதிக்கு ஓத்தி வைத்தார். தொடர்ந்து மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இன்று நடக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+