தந்தையின் வேலையை அனுதாப அடிப்படையில் பெற சுட்டுக் கொன்ற மகன்
பாட்னா: தந்தை பார்த்து வந்த ரயில்வே வேலையை அனுதாப அடிப்படையில் பெறுவதற்காக, அவரை சுட்டுக் கொன்றார் மகன்.
பீகார் மாநிலத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் தொகுதியான சரண் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அங்குள்ள ரகீம்பூரை சேர்ந்தவர் சாம்புராவ். 4 குழந்தைகளுக்கு தந்தையான இவருக்கு சரியான வேலை அமையவில்லை. எனவே குடும்பமே கஷ்டத்தில் இருந்தது.
இவருடைய தந்தை ரயில்வேயில் வேலை பார்த்து வந்தார். இன்னும் 6 மாதங்களில் ஓய்வு பெறவிருந்தார். ரயில்வேயில் பணியாற்றுபவர்கள் பணியின்போது மரணத்தை சந்தித்தால் அவர்களது வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை தரப்படும்.
இதை கணக்கிட்டுப் பார்த்தார் சாம்புராவ். தந்தை இறந்தால் தனக்கு வேலை கிடைக்குமே என்று யோசித்த அவர் தந்தையைக் கொன்று விடத் தீர்மானித்தார்.
இந்த நிலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய சாம்புராவின் தந்தை அருகில் உள்ள டீக் கடைக்கு டீ சாப்பிடச் சென்றார். அப்போது அங்கு வந்த சாம்புராவ், இருளான இடத்தில் தந்தை போய்க் கொண்டிருந்தபோது அவரை பின்னாலிருந்து சுட்டு தந்தையைக் கொன்றார்.
பிறகு துப்பாக்கியை தூக்கி வீசி விட்டு வீடு திரும்பி விட்டார். கொலை குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் விசாரணையில் இறங்கினர். அதில் சாம்புராவ்தான் தந்தையைக் கொன்றது தெரிய வந்தது.
வாரிசு வேலை பெறுவதற்காகவே தந்தையை கொன்றதாக சாம்பு தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
வாரிசு வேலையைப் பெறுவதற்காக தந்தையைக் கொன்ற சாம்பு ராவ் தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications