பென்னாகரம் இடைத் தேர்தல்: 'டெபாசிட் பயம்'-தேமுதிக புறக்கணிப்பு?

பென்னாகரம் தொகுதிக்கு ஒரு வழியாக வரும் மார்ச் 27ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. வேட்பு மனு தாக்கல் மார்ச் 3ம் தேதி தொடங்குகிறது.
இந்தத் தொகுதிக்கு திமுக சார்பில் இன்பசேகரனும், பாமக சார்பில் தமிழ்குமரனும் நிறுத்தப்பட்டுள்ளனர். அதிமுக மற்றும் தேமுதிக வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.
அதிமுக வேட்பாளர் தேர்வு குறித்து இன்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மூத்த தலைவர்களான பொன்னையன், தம்பித்துரை, செங்கோட்டையன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
ஆனால், சமீபத்தில் நடந்த இரு இடைத் தேர்தல்களில் டெபாசிட்டையே இழந்து மிகக் கேவலமாகத் தோல்வியடைந்த தேமுதிக இந்தத் தேர்தலை புறக்கணிக்கும் என்று தெரிகிறது.
அதே நேரத்தில் இடைத் தேர்தலில் போட்டியிடுவதே நல்லது என்று கட்சியின் தலைவர் விஜய்காந்திடம் முன்னணித் தலைவர்கள் அறிவுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கட்சியின் சார்பில் பென்னாகரத்தில் போட்டியிட டாக்டர் செந்தில் உள்பட சிலர் விருப்ப மனுவும் செய்துள்ளனர். ஆனால், விஜயகாந்த் இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார்.
இதற்கிடையே பென்னாகரத்தில் பாமக படு வேகமாக பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. பதிலுக்கு திமுகவும் அமைச்சர் வேலு தலைமையில் பிரச்சாரக் களத்தை சூடு பிடிக்க வைத்துள்ளது.
பாமக வேட்பாளர் தமிழ்க்குமரனுக்கு ஆதரவாக அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ஆகியோர் இரவு-பகலாக தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். பாமகவின் எம்எல்ஏக்கள் அனைவரும் வீடு வீடாக ஏறி இறங்கி வருகின்றனர்.
திமுக சாக்பில் அமைச்சர்கள் பட்டாளமே களத்தில் குதித்துள்ளது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications