கரூர்: அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது: 3 பேர் பலி, 25 பேர் காயம்

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் அருகே இன்று காலை சென்று கொண்டிருந்த அரசு பஸ் விபத்துக்குள்ளாகி 3 பேர் பலியானார்கள். 25 பேர் காயமடைந்தனர்.

கரூர் மாவட்டம் அரவங்குறிச்சி அருகே ரங்கமலை கணவாய் பகுதியில் இன்று காலை 6.30 மணியளவில் சேலத்தில் இருந்து மதுரை நோக்கி அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது.

அப்போது பேருந்தின் முன் பக்க டயர் திடீரென வெடித்தது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி 20 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது.

இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 25 பேர் படுகாயமடைந்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இறந்தவர்களில் 2 பேரது அடையாளம் தெரிய வந்துள்ளது. ஒருவர் நாகராஜன் கரூரை சேர்ந்தவர். மற்றொருவர் ரவிச்சந்திரன் கரூர் கனரா வங்கி ஊழியர்.

டிராக்டர் மீது லாரி மோதி 2 பெண்கள் பலி:

ஊத்துக்கோட்டை அருகே தமிழக ஆந்திரா எல்லையில் சுருட்டுப்பள்ளி என்ற கிராமம் உள்ளது.

அங்கு முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது லாரி மோதியது. இதில் நிலைகுலைந்த டிராக்டர் சாலையோரத்தில் இருந்த டீக்கடை மீது மோதியது.

இந்த சம்பவத்தில் 2 பெண்கள் பலியானார்கள். மேலும் ஒரு பெண் மற்றும் 2 சிறுமிகள் படுகாயமடைந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+