7வது ஆண்டாக கட்டண உயர்வு இல்லா ரயில்வே பட்ஜெட்!

அதில் பயணிகள் கட்டணமோ அல்லது சரக்குக் கட்டணமோ உயர்த்தப்படவில்லை.
அதே நேரத்தில் ஏசி பெட்டிகளுக்கான சேவைக் கட்டணம் ரூ. 20 குறைக்கப்பட்டுள்ளது.
அதே போல உணவு தானியங்கள், மண்ணெண்ணெய் கொண்டு செல்லும் சரக்குப் பெட்டிகளின் கட்டணம் ஒரு பெட்டிக்கு ரூ. 100 குறைக்கப்பட்டுள்ளது.
இது மம்தா பானர்ஜி தாக்கல் செய்த 2வது ரயில்வே பட்ஜெட் ஆகும்.
பயணிகள் கட்டணம் இந்த ஆண்டும் உயர்த்தப்படவில்லை. இதன்மூலம் லாலு பிரசாத் யாதவ காலத்தில் ஆரம்பித்து கடந்த 7 ஆண்டுகளாக ரயில் கட்டணமே உயர்த்தாமல் சாதனை படைக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் அமளி-ஒத்திவைப்பு:
முன்னதாக விலைவாசி உயர்வு குறித்து ஒத்தி வைப்புத் தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என்று கோரி இரண்டாவது நாளாக எதிர்க் கட்சிகள் இன்னும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
அமளி-ராஜ்யசபாவும் ஒத்திவைப்பு:
அதே போல விலைவாசி உயர்வு குறித்து இன்று 2வது நாளாக ராஜ்யசபாவில் பெரும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து இன்று பிற்பகல் வரைக்கும் ராஜ்யசபா ஒத்திவைக்கப்ப்டது.
இன்று காலை சபை கூடியதும் பாஜக உறுப்பினர்கள் எழுந்து விலைவாசி உயர்வு பிரச்சினை தொடர்பாக வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்தை நடத்த வேண்டும் என்று கோஷமிட்டனர்.
பாஜக துணைத் தலைவர் எஸ்.எஸ்.அலுவாலியா கூறுகையில், விவாதம் என்று இருந்தால் அது வாக்கெடுப்புடன் தான் முடிய வேண்டும் என்றார்.
ஆனால் இதற்கு ஆளுங் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து பதில் கூச்சல் எழுப்பினர்.
பாஜகவுக்கு ஆதரவாக சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், இடதுசாரிகள் உள்ளிட்டோர் எழுந்து கோஷமிட்டனர்.
ஆனால் உறுப்பினர்கள் அமைதி காக்குமாறு கோரிய சபைத் தலைவர் ஹமீத் அன்சாரி, கேள்வி நேரத்தை தொடங்கப் போவதாக அறிவித்தார்.
ஆனால் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபடவே இந்த நிலையில் கேள்வி நேரத்தை நடத்த முடியாது என்று கூறி பிற்பகல் வரை அவையை ஒத்திவைத்தார்.
இந் நிலையில் பகல் 12 மணிக்கு மக்களவையில் மம்தா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் தனது உரையை 2 மணிக்கு முடித்தார்.
இது மம்தா பானர்ஜி தாக்கல் செய்த 2வது ரயில்வே பட்ஜெட் ஆகும்.
பயணிகள் கட்டணம் இந்த ஆண்டும் உயர்த்தப்பட வில்லை. இதன் மூலம் கடந்த 7 ஆண்டுகளாக ரெயில் வேத் துறை பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல் சாதனை படைத்துள்ளது.












Click it and Unblock the Notifications