இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 62வது நிறுவன தினம்- சமுதாய மறுமலர்ச்சி மாநாடு
நெல்லை: இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 62வது நிறுவன தினத்தையொட்டி, வரும் மார்ச் 10ம் தேதி மேலப்பாளையத்தில் சமுதாய மறுமலர்ச்சி மாநாடு நடைபெற உள்ளது.
மாநாட்டு அமைப்புக் குழுத் தலைவரும், நெல்லை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவருமான எம்.எஸ். துராப்ஷா, மாவட்டச் செயலாளர் எல்.கே.எஸ். மீரா முகைதீன் உள்ளிட்டோர் மேலப்பாளையத்தில் மாநாடு நடைபெறும் முஹம்மது அலி ஜின்னா மைதானத்தை பார்வையிட்டனர்.
இம்மாநாட்டையொட்டி 350 அடி நீளம், 100 அடி அகலத்தில் பந்தல் அமைப்பது என்றும், 40-க்கு 40 அளவில் மேடை அமைப்பது என்றும் முடிவெடுத்தனர். மாநாட்டிற்கு வருகை தருவோருக்குரிய வசதிகள் பற்றியும் முடிவு வெடுக்கப்பட்டது.
பின்னர் ஊர்வலம் துவங்கும் வி.எஸ்.டி. சந்திப் பிலிருந்து ஊர்வலம் நடந்து வரும் பாதைகளை ஆய்வு செய்து அதில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றி முடிவு செய்தனர்.
முஸ்லிம் லீக் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் மேலப்பாளையம் உஸ் மானியா அரபிக் கல்லூரிக்குச் சென்று முதல்வர் மவ்லானா ஹைதர் அலி ஹஸரத் உள்ளிட்ட உலமா பெருந்தகைகளை சந்தித்து மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.
நெல்லை மாவட்ட முஸ்லிம் லீக் ஆலோசனை கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.


Click it and Unblock the Notifications
