நாளை மத்திய பட்ஜெட் 2010-11 தாக்கல் - எதிர்பார்ப்புகள் ஏராளம்

விலைவாசி உயர்வு நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் நிலையில் நாளை தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் என்னென்ன இடம் பெறப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் பலமாக உள்ளது.
அரசு அறிவித்த பல்வேறு நிதிச் சலுகைகளை முடிவுக்குக் கொண்டு வருமாறு நிதி ஆலோசகர்கள் அரசை ஏற்கனவே வலியுறுத்தியுள்ளனர். எனவே பல்வேறு வரி விதிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் தற்போதைக்கு நேரடி வரி விகிதங்கள் மாற்றப்படாது என்று கருதப்படுகிறது.
மாதச் சம்பளம் வாங்குவோருக்கு வருமான வரி உச்சவரம்பு ஓரளவு கூட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ. 1 லட்சத்து 60 ஆயிரமாக உள்ளது. இது ரூ. 1 லட்சத்து 80 ஆயிரத்தில் இருந்து ரூ. 2 லட்சம் வரை உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்களுக்கு தற்போது வருமான வரி உச்சவரம்பு ரூ. 1 லட்சத்து 90 ஆயிரமாகவும், மூத்த குடிமக்களுக்கு ரூ. 1 லட்சத்து 40 ஆயிரமாகவும் உள்ளது. இதில் ரூ. 10 ஆயிரத்தில் இருந்து ரூ. 30 ஆயிரம் வரை அதிகரிக்கும் திட்டம் உள்ளது.
கழிவுகளில் தற்போது தேசிய சேமிப்பு பத்திரம், தொழிலாளர் சேமிப்பு நிதி, குழந்தைகள் கல்வி கட்டணம், வீட்டு வாடகை போன்றவை உள்ளன. இவற்றில் புதிதாக சிலவற்றையும் சேர்க்க உள்ளனர்.
விலைவாசி உயர்வைக் குறைக்கும் வகையில், பல்வேறு அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்படக் கூடும். விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படக் கூடும்.
வழக்கம் போல பல்வேறு வகையான கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டமும் இடம் பெறலாம்.
பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடு பெருமளவில் அதிகரிக்கப்படக் கூடும்.
விலைவாசி உயர்வுதான் பெரும் பிரச்சினையாக இருப்பதால் அதற்கேற்றார் போலவும், மேற்கு வங்கத்தில் விரைவில் பொதுத் தேர்தல் வரவுள்ளதால் அதையும் மனதில் கொண்டும் பல்வேறு சலுகைகளுடன் கூடிய பட்ஜெட்டாக நாளைய பட்ஜெட் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
--
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications