சிங்கப்பூர் இந்து கோயில் நிர்வாகத்தில் முறைகேடு: விசாரணை தீவிரம்
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ சிவா கிருஷ்ணா கோயில் நிர்வாக முறைகேடுகள் குறித்து அரசு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ சிவா கிருஷ்ணா கோயில் நிர்வாகத்தை 16 பேர் கொண்ட கமிட்டி கவனித்து வருகிறது. வாரந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தரும் இந்த கோயிலுக்கு 27 லட்சம் சிங்கப்பூர் டாலருக்கும் மேலான மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.
இக்கோயிலின் 2007ம் ஆண்டு வருமானம் 3 லட்சத்து 50 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்.
இந்நிலையில் இக்கோயிலில் வருமான கணக்கு முறைகேடுகள் நடப்பதாக சமூக மேம்பாட்டுத் துறைக்கு புகார் சென்றது.
இதன் அடிப்படையில் கடந்தாண்டு ஜூலை மாதம் அதிகாரிகள் இக்கோயில் நிர்வாகம் தொடர்பான விசாரணையை தொடங்கினர்.
அறக்கட்டளை விதிகளின் படி சொசைட்டியாக பதிவு செய்ப்பட்ட இக்கோயிலின் வரவு செலவு கணக்குகள் சரிவர கையாளப் படவில்லை என்றும் நிர்வாக சீர்கேடுகள் காணப்படுவதாகவும் இந்து சமய அறநிலையத்துறை தலைமை செயலாளர் எஸ்.நல்லதம்பி தெரிவித்தார்.
இந்நிலையில், கோயில் நிர்வாகிகள் மற்றும் புகார் தொடர்பாக இதுவரை அரசு அதிகாரிகள் சுமார் 2 ஆயிரம் பேரிடம் விசாரணை நடத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
விசாரணை விரைவில் முடிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications