மகளிர் இட ஒதுக்கீடு மசோதா- கேபினட் இன்று பரிசீலனை
டெல்லி: நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெணக்ளுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா குறித்து இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
மகளிருக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா தயாராகி பல காலமாக கிடப்பில் உள்ளது.
மசோதாவை தாக்கல் செய்யவே முடியாத நிலை காணப்படுகிறது. பல முக்கியக் கட்சிகள் இந்த மசோதாவை எதிர்த்து வருகின்றன.
இந்த நிலையில் இந்த மசோதாவை இன்று மத்திய அமைச்சரவை பரிசீலிக்கவுள்ளது. இந்தக் கூட்டத்தில் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் எனத் தெரிகிறது. கடந்த 2008ம் ஆண்டு மகளிர் மசோதா ராஜ்யசபாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் லோக்சபாவுக்குள் நுழைய முடியாத நிலை காணப்படுகிறது.
மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா கடந்த 1996ம் ஆண்டு தேவே கெளடா ஆட்சியின்போது உருவாக்கப்பட்டதாகும். அன்று முதல் இன்று வரை அதை நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளது.
கடந்த 1999ம் ஆண்டு இந்த மசோதாவை அப்போதைய சட்ட அமைச்சர் ராம் ஜேட்மலானி தாக்கல் செய்ய எழுந்தபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதைப் பறித்து கிழித்து எறிந்தனர்.
2008ம் ஆண்டிலும் ராஜ்யசபாவில் இந்த மசோதாவை அப்போதைய சட்ட அமைச்சர் எச்.ஆர்.பரத்வாஜ் அறிமுகப்படுத்தியபோது, பறிக்க முயற்சி நடந்தது. ஆனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் நாராயணசாமியும், ரேணுகா சவுத்ரியும், அவரைச் சுற்றி அரண் போல நின்று காத்தனர். இதனால் மசோதாவை யாரும் பறிக்க முடியாமல் போனது.
இந்த நிலையில், திங்கள்கிழமை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ஆற்றிய உரையில், மகளிர் மசோதா தாக்கல் செய்யப்படும் என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து மசோதாவை லோக்சபாவில் தாக்கல் செய்ய மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே மசோதாவை தாக்கல் செய்ய காங்கிரஸ் கூட்டணி அரசு தீவிரமாக உள்ளது.
ஆனால் அது அவ்வளவு எளிதானதாக இருக்குமா என்பது தெரியவில்லை. தற்போதைய மசோதாவுக்கு லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ், சரத் யாதவ் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த மசோதாவால் நகர்ப்புற பெண்களுக்குத்தான் லாபம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
இதுபோன்ற எதிர்ப்புகளைத் தாண்டி மத்திய அரசு இந்த மசோதாவை எப்படி நிறைவேற்றப் போகிறது என்பது தெரியவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications