1000 வழக்குகளை விசாரித்து வரும் சிபிஐ

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சிபிஐ நாடு முழுவதும் மொத்தம் ஆயிரம் ஊழல் வழக்குகளை தற்போது விசாரித்து வருகிறதாம்.

இந்தாண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் ஊழல் தொடர்பாக 287 புகார்களை சிபிஐ அதிகாரிகள் பெற்றுள்ளனர். அவற்றில் 59 புகார்கள் அடிப்படை ஆதாரங்கள் உள்ளவை என்றும், நடவடிக்கை எடுக்கத் தக்கவை என்றும் சிபிஐ தரம் பிரித்துள்ளது.

கடந்த 2007ம் ஆண்டில் சிபிஐ பெற்ற புகார்களின் எண்ணிக்கை ஆயிரத்து 895 மட்டுமே. ஆனால் 2008ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 632ஆக உயர்ந்தது.

பின்னர் கடந்தாண்டு, புகார்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 394ஆக அதிகரித்துள்ளது.

சிபிஐ பணியிடங்களில் 38 சதவீதம் காலி

மத்திய புலனாய்வுத் துறையில் மொத்தம் 778 பணியிடங்கள் காலியாக இருப்பது தெரிய வந்துள்ளது. மொத்தமுள்ள பணியிடங்களில் இந்த காலியிடங்களின் எண்ணிக்கை 38 சதவீதமாகும்.

கடந்தாண்டு காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 36 சதவீதமாக இருந்தது. அதுவே 2008ம் ஆண்டு 32 சதவீதமாக இருந்தது.

அதாவது, கடந்த 2009ம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட 5 ஆயிரத்து 961 பணியிடங்களில் 719 இடங்கள் காலியாகவே இருந்தது.

தற்போது சட்டத் துறையில் மட்டும் ஒப்புதல் அளிக்கப்பட்ட 237 பணியிடங்களில் 91 இடங்கள் காலியாகவே உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+