சேலம்: கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அரவாணிகள்!
சேலம்: அரவாணிகளுக்கு இடையே கோஷ்டி மோதல் காரணமாக சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சேலம் புது பஸ் நிலையம், ஐந்து ரோடு, ஜங்ஷன், சீலநாயக்கன்பட்டி, தாதகாப்பட்டி போன்ற பல்வேறு இடங்களில் அரவாணிகள் தனித்தனி குழுவாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர்.
இதில், அரவாணி சுமதி தலைமையில் ஒரு கோஷ்டியும், தாய் விழுதுகள் அமைப்பு சார்பில் மற்றொரு கோஷ்டியும் செயல்பட்டு வருகின்றன.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன், இரு கோஷ்டிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், சுமதி கோஷ்டியை சேர்ந்த மூன்று பேர், படுகாயமம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.
இதனையடுத்து, சுமதியை கண்டித்து தாய் விழுதுகள் அமைப்பை சேர்ந்த 13 மாவட்டங்களை சேர்ந்த அரவாணிகள் சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது அங்கு வந்த போலீஸ் துணை கமிஷனர் சுமதி மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications