திமுக பிரமுகர் நடத்தி வந்த போலி சிமெண்ட் ஆலை திருவண்ணாமலை அருகே கண்டுபிடிப்பு!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே திமுக பிரமுகருக்குச் சொந்தமான போலி சிமெண்ட் ஆலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளு.
திருவண்ணாமலை அருகே பெங்களூர் - பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் இந்த போலி சிமெண்ட ஆலை இயங்கி வந்தது.
இதையடுத்து சிமெண்ட் விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் போலி சிமெண்ட் ஆலை குறித்து திருவண்ணாமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று திருவண்ணாமலை இன்ஸ்பெக்டர் வெள்ளையன் சோதனை செய்த போது, அந்த ஆலைக்குள் மார்க்கெட்டில் உள்ள அனைத்து கம்பெனிகளின் சிமெண்ட் மூட்டைகளும் இருந்தன. மேலும் கலப்படம் செய்வதற்கான இயந்திரமும் கண்டுபிடிக்கப்பட்டன.
இருந்த லாரியில் சிமெண்ட் மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், சிமெண்ட் மூட்டை ஏற்றப்பட்ட லாரியை கைப்பற்றினர். லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
போலி ஆலை இருந்த இடம் திருவண்ணாமலையில் உள்ள திமுக பிரமுகர் ஒருவருக்கு சொந்தமானது என்று கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications