மெரீனாவில் விபரீதம்: காதலன் தற்கொலை- காதலி உயிர் ஊசல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் காதல் ஜோடி ஒன்று விஷம் குடித்தது. இதில் காதலன் பரிதாபமாக இறந்தார். காதலி உயிர் ஊசலாடி வருகிறது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகேயுள்ள கஞ்சர்பாளையத்தை சேர்ந்தவர் ராமலு. இவர் விவசாய தொழில் செய்கிறார். இவரது மகன் ரகு (30). ஐ.டி.ஐ. படித்து முடித்துவிட்டு தனியார் கம்பெனி ஒன்றில் எலக்ட்ரிஷியனாக பணியாற்றி வந்தார்.

அதே பகுதியில் உள்ள நர்சிபட்டினம், சிதப்புலம் கிராமத்தை சேர்ந்தவர் பங்காரய்யா. இவரும் விவசாய தொழில் தான் செய்கிறார். இவரது மகள் சுமலதா (22). 10 ம் வகுப்பு வரை படித்துள்ளார்.

ரகுவும், சுமலதாவும் காதலித்து வந்தனர். ஆனால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பெற்றோர் எதிர்ப்பை மீறி கல்யாணம் செய்ய முடிவெடுத்து சென்னைக்கு ரயிலேறினார்கள்.

பதிவுத் திருமணம் செய்ய முயன்று பல்வேறு பதிவாளர் அலுவலகங்களை நாடினர். ஆனால் அங்கு கூறப்பட்ட விதிமுறைகளைப் பார்த்து கல்யாணம் செய்ய முடியாதோ என்று கவலைக்குள்ளாகினர். இதையடுத்து தற்கொலை முடிவை எடுத்தனர்.

நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் மெரினா கடற்கரைக்கு வந்தனர். கட்டிப் பிடித்தபடி உருக்கமாக பேசிக் கொண்டிருந்த பின்னர் இருவரும் வாங்கி வந்த பூச்சி மருந்தை சாப்பிட்டுள்ளனர்.

சிறிது நேரத்தில் இருவரும் மயங்கி விழுந்தனர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் கொண்டு சென்றனர்.

அங்கு நேற்று மாலை ரகு உயிரிழந்தார். சுமலதா உயிருக்குப் போராடி வருகிறார்.

இருவரது பெற்றோர்களுக்கும் தகவல் போய் அவர்கள் பதறியடித்து வந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+