ரயிலில் கொண்டு செல்லப்படும் சரக்குகள் மீது பட்ஜெட்டில் சேவை வரி: மம்தா கடும் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

Mamata Banerjee
டெல்லி: மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த பட்ஜெட்டில் ரயிலில் கொண்டு செல்லப்படும் சரக்குகள் மீது சேவை வரி விதிக்கப்பட்டதற்கு ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மம்தாவுடன் நிதியமைச்சரோ அல்லது பிரதமரோ விவாதிக்கவில்லை. பிரணாப் முகர்ஜி பட்ஜெட்டை படித்தபோது தான் மம்தாவுக்கே இந்த விவரம் தெரியவந்தது.

கடந்த 24ம் தேதி ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த மம்தா, பயணிகள் கட்டணத்தையோ சரக்கு கட்டணத்தையோ உயர்த்தவில்லை. இதன் மூலம் நல்ல பெயர் வாங்க முயன்ற இவருக்கு, இந்த சேவை வரி பெரும் அதிர்ச்சியளித்துள்ளது.

பிரணாப் முகர்ஜியின் அறிவிப்பால் ரயில்களில் சரக்குக் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலைக்கு மம்தா தள்ளப்பட்டுள்ளார். இதுவரை சரக்குகள் மீது சேவை வரியே விதிக்கப்பட்டதில்லை. இந்த பட்ஜெட்டில் தான் திடீரென இந்த வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதமர் மன்மோகன் சி்ங்குக்கு கடிதம் அனுப்பியுள்ளார் மம்தா.

அதே போல பட்ஜெட்டில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டதற்கும் மம்தா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+