அடுத்து 'அம்மா' ஆட்சிதான் வரும்: ராமராஜன் நம்பிக்கை
ஈரோடு: காங்கிரஸ் கட்சி அதிமுக கூட்டணிக்கு வரும். வருகிற சட்டசபை பொதுத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என்று கூறியுள்ளார் நடிகர் ராமராஜன்.
ஈரோட்டில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் ராமராஜன் பேசினார். வழக்கம் போல தொண்டர்களை குஷிப்படுத்தும் வகையில் பேசினார் ராமராஜன். அவர் பேசுகையில்,
ஆட்சியில் இருந்தாலும் இல்லாமல் இருந்தாலும் தமிழக மக்களைப்பற்றி மட்டுமே சிந்திப்பவர் ஜெயலலிதா. மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தி வருபவர்.
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கடவுளின் அருள் பெற்றவர்கள். ஜெயலலிதா எப்போதும் நாட்டைப்பற்றி சிந்திப்பவர். ஆனால் கருணாநிதி வீட்டைப்பற்றி சிந்திப்பவர்.
இன்னும் 4 மாதத்திலேயோ அல்லது ஒரு ஆண்டிலேயோ தேர்தல் வரும். நமது கூட்டணியில் இருந்துதான் காங்கிரஸ் தி.மு.க.வுக்கு சென்று உள்ளது. அது மீண்டும் அ.தி.மு.க. கூட்டணிக்கே வரும்.
அரசியலில் எதுவும் எப்போதும் நடைபெறும். தேர்தல் எப்போது எப்படி வந்தாலும் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று முதல் அமைச்சராக ஜெயலலிதா ஆட்சியில் அமர்வார் என்றார் ராமராஜன்.












Click it and Unblock the Notifications