சாதிச் சான்றிதழ் கோரி போராட்டம் நடத்திய பழங்குடியினர் நள்ளிரவில் கைது
Subscribe to Oneindia Tamil
திருப்பத்தூர்: சாதிச் சான்று வழங்கக் கோரி திருப்பத்தூரில் போராட்டம் நடத்திய குறுமன்ஸ் பழங்குடியின மக்களை போலீசார் நள்ளிரவு நேரத்தில் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் குறுமன்ஸ் பழங்குடியினர் மக்கள் பலர் வசித்து வருகின்றனர்.
இவர்கள் தங்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்க மாவட்ட விழிக்கண் குழு பரிந்துரை செய்தது. ஆனால் இதற்கு சார் ஆட்சியராக உள்ள நந்தகுமார் என்பவர் மறுத்து வருவதாக கூறப்படுகின்றது.
இதைக் கண்டித்து தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் திருப்பத்தூரில் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தை நான்கு கட்டமாக கைவிட கோரி நான்கு கட்ட பேச்சு வார்த்தை நடத்தப்புடம் எந்தவித முடிவும் ஏட்டப்படவில்லை.
இதனால், போராட்டத்தில் ஈடுபட்ட 600க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications