நெல்லை, தூத்துக்குடி: 372 ஏட்டுகளுக்கு பதவி உயர்வு
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் 372 தலைமைக் காவலர்கள் சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான அறிவிப்பு இன்று வெளியானது.
இதனால் ஏற்படும் போலீஸ் பற்றாக்குறையை போக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
1976ம் ஆண்டு முதல் 1980ம் ஆண்டுவரை பணியில் சேர்ந்த போலீசார் மற்றும் இவர்களி்ல் 10 ஆண்டுகளாக போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து பூர்த்தி செய்த எவ்விதமாக குற்றசாட்டும் இல்லாத நெல்லை மாவட்ட போலீஸ் ஏட்டுகள் 241 பேருக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு நேற்று வழங்கப்பட்டது. இதற்கான உத்தரவை நெல்லை மாவட்ட எஸ்பி ஆஸ்ரா கர்க் தெரிவித்துள்ளார்.
பதவி உயர்வு பெற்றவர்கள் இன்னும் ஓரிரு நாளில் அந்த அந்த போலீஸ் ஸ்டேஷன்களில் பொறுப்பு ஏற்க உள்ளனர். 23 போலீஸ் ஏட்டுகள் மீது குற்றச்சாட்டு மற்றும் தண்டனைகள் உள்ளதால் அவர்களி்ன் பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் 6 உட்பட மொத்தம் 66 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இந்த பதவி உயர்வால் ஒரு போலீஸ் ஸ்டேஷனில் கூடுதலாக 4 சப்-இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்க உள்ளனர். இதனால் போலீசார் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
உயர் போலீஸ் அதிகாரிகள் உடனடியாக ஆயுதப்படை மற்றும் பட்டாலியன் போலீசாரை உள்ளூர் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு இடமாற்றம் செய்தால் மட்டுமே இந்த பற்றாக்குறையை சாமாளிக்க முடியும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றிய 131 ஏட்டுகளுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications