பெண் சபலத்தால் ரூ.4.5 லட்சத்தை இழந்த லாரி டிரைவர் தற்கொலை முயற்சி
பழனி: பெண் சபலத்தால் ரூ.4.5 லட்சத்தை கொள்ளையர்களிடம் பறிகொடுத்துவிட்டு, தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற லாரி டிரைவர், பலத்த தீக் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த லாரி டிரைவர் தர்மராஜ் (40). இவர் சிவகங்கையில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்று கேரளாவில் விற்றார்.
பின்னர் திரும்பி வரும் போது கேரளாவில் இருந்து தீப்பெட்டி கழிவுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே இறக்குவதற்காக வந்து கொண்டிருந்தார்.
பெரியகண்ணாடி புதூர் புதுக்குளத்தை சேர்ந்த தனபால்(29) என்ற கிளீனரும் உடன் இருந்தார். பழனியை அடுத்த கணக்கன்பட்டி அருகில் உள்ள தாய் மூகாம்பிகை கோவில் அருகே நேற்று காலை 5 மணிக்கு லாரி வந்தது.
அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் லாரியை நிறுத்தினார். தர்மராஜ் லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். பின்னாலேயே தனபாலும் இறங்கி வந்தார்.
அப்போது புதர் மறைவில் இருந்த 3 பேர் திடீரென்று கத்தியுடன் பாய்ந்து வந்து டிரைவர் தர்மராஜையும், தனபாலையும் சூழ்ந்து கொண்டனர். தர்மராஜ் அணிந்திருந்த லுங்கியை கழட்டி இருவரின் கைகளையும் மர்ம கும்பல் கட்டிப் போட்டது.
பின்னர் 3 பேரும் லாரியில் ஏறி அங்கிருந்த பெட்டியை உடைத்து ரூ.4.5 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு, அந்த பெண்ணுடன் தப்பி ஓடி விட்டனர்.
சிறிது நேரம் கழித்து கைக்கட்டை அவிழ்த்துக்கொண்டு, போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் டிரைவர் தர்மராஜ்.
எனினும் பணம் உடனடியாக திரும்ப கிடைக்க வாய்ப்பில்லை என்று நினைத்த டிரைவர் தர்மராஜ், லாரி உரிமையாளருக்கு என்ன பதில் சொல்வது என்ற பயத்தில் டீசலை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றி பழனியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications