இருவரின் உடலுறுப்பு தானம்: 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது
சென்னை: விபத்தில் சிக்கி மூளை செயலிழந்த இரண்டு பேரின் உடல் உறுப்பு தானத்தால் 6 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
வேலூரை சேர்ந்த பார்த்திபன் (42) என்பவர் விபத்தில் காயம் அடைந்து சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அதே மருத்துவமனையில் வெங்கடேஷ் (29) என்பவரும் விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்றார்.
இருவரும் கடந்த சில தினங்களாக உயிருக்கு போராடி வந்தார்கள். இருவருக்கும் மூளை செயலிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர்.
உடனடியாக அவர்களின் உறுப்புகளை எடுத்து தேவைப்படுபவர்களுக்கு பொருத்த டாக்டர்கள் முடிவு செய்தனர்.
இதன்படி, நேற்று அதிகாலை 2 மணியளவில், இறந்தவர்களின் உடலில் இருந்து 4 சிறுநீரகங்கள், 2 கல்லீரல்கள் எடுக்கப்பட்டன.
சிறுநீரகம் செயலிழந்து சிகிச்சை பெற்று வந்த 3 பேருக்கு சிறுநீரகங்களை பொருத்தினார்கள். 14 மணி நேரத்தில் இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மருத்துவர்கள் திறம்பட செய்து முடித்தார்கள்.
ஒரு சிறுநீரகமும், கல்லீரலும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டன. கண்கள் எழும்பூர் கண் மருத்துவமனைக்கு தரப்பட்டன. இன்னொரு கல்லீரல் தனியார் மருத்துவமனைக்கு தரப்பட்டது.
இந்த இரண்டு பேரின் உறுப்பு தானத்தால் 6 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications