கிராம் கிராமமாக வைகோ நாளை கொடிபயணம்
கடையநல்லூர்: கடையநல்லூர் ஓன்றியத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ கொடிபயணம் செய்து கிராமம் கிராமமாக சென்று கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
நாளை மாலை 4 மணிக்கு கடையநல்லூர் ஓன்றியம் புன்னையாபுரத்தில் கொடியேற்றி வைத்து பின் சிங்கிலிபட்டி, சொக்கம்பட்டி, திரிகூடபுரம், முத்துசாமிபுரம், கிருஷ்ணாபுரம், கடையநல்லூர் நகரம், பண்பொழி, செங்கோட்டை, இலத்தூர், இலஞ்சி, இ.விலக்கு, ஆய்க்குடி, ஆகிய இடங்களில் கொடியேற்றி வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்.
இரவில் சுரண்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்குகிறார். யூனியன் சேர்மன்கள் சிங்கபுலி பாண்டியன், விசுவாமித்தரன், மாவட்ட செயலாளர் டாக்டர் அப்பராஜ், ரைமண்ட், மாவட்ட பொருளாளர் முன்னிலை வகிக்கிறார். மாநில துணை பொது செயலாளர் நாசரேத் துரை, வாசுதேவநல்லூர் எம்எல்ஏ சதன் திருமலைக்குமார், உள்பட மதிமுக நிர்வாககிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுக்கின்றனர்.
மார்ச் 2ம் தேதி நாளை மறுநாள் மாலை 4 மணிக்கு தென்காசி ஓன்றியத்தில் துவக்கி தென்காசி நகர பகுதிகளில் கொடியேற்றி சிறப்புரையாற்றுகிறார். பின்னர் அம்பை ஓன்றியம், அம்பை நகரத்தில் கொடியேற்றி வைத்து இரவில் அம்பை பொதுகூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார்.
மார்ச் 3ம் தேதி பாளை ஓன்றியம், நாங்குநேரி ஓன்றியத்தில் கொடியேற்றி சிறப்புரையாற்றுகிறார்.
--












Click it and Unblock the Notifications