டீசல் விலை உயர்ந்தாலும் பஸ் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது - அமைச்சர் நேரு

Subscribe to Oneindia Tamil

KN Nehru
அரியலூர்: டீசல் விலை எவ்வளவு உயர்ந்தாலும், தமிழகத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் அரசிடம் இல்லை என்று கூறியுள்ளார் போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேரு.

அரியலூர் மாவட்டம் திருமானூரில் நடந்த நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு புதிதாக 13,500 பஸ்கள் வாங்கப்பட்டு, இயக்கப்படுகின்றன. நிகழாண்டில் மேலும் 3000 பஸ்கள் புதிதாக வாங்கப்பட உள்ளன.

அரசுப் போக்குவரத்துக் கழகம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்தாலும், டீசல் கட்டணம் மேலும் உயர்ந்தாலும், பஸ் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் சுமார் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக ஆதரவு வேட்பாளருக்கு வாக்களித்துள்ளீர்கள். இந்தப் பகுதி மக்களுக்கு இன்னும் பல்வேறு வசதிகள் செய்து தர நாங்கள் காத்திருக்கிறோம்.

பல்வேறு சிரமங்களுக்கு இடையே, திருமானூரில் ஜல்லிக்கட்டு நடத்த சட்டப் பேரவை உறுப்பினர் பாளை.து.அமரமூர்த்தி அனுமதி பெற்றுள்ளார். இந்தப் பகுதி மக்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் அமரமூர்த்திக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்றார் நேரு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+