மின்சார பில்களை இனி தபால் அலுவலங்களிலும் கட்டலாம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மின்சார பில்களை தபால் அலுவலகங்களில் கட்ட புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான ஒப்பந்தத்தை தமிழ்நாடு மின்சார வாரியமும், தபால் துறையும் மேற்கொண்டுள்ளன.
தொடக்கத்தில் இந்த புதிய வசதி சென்னை அண்ணா நகர் தபால் நிலையம், அண்ணா சாலை தலைமை தபால் நிலையம் ஆகியவற்றில் இருக்கும். இந்த வசதியை இன்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் படிப்படியாக சென்னை முழுவதும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும். தொடர்ந்து மாநிலத்தின் இதர பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்படும்.












Click it and Unblock the Notifications