அடுத்த 25 ஆண்டுகளும் 10% வளர்ச்சி-பிரதமர் நம்பிக்கை

சௌதி அரேபியாவின் பாராளுமன்றம் மஜ்லிஸ் அஷ் ஷூரா வில் இன்று உரையாற்றிய மன்மோகன் சிங்,
"சர்வதேச பொருளாதார நெருக்கடிகளுக்கிடையிலும் இந்தியா மட்டும் 7.5 சதவிகித வளர்ச்சியைப் பெற்றது ஒரு பெரிய சாதனை. இந்த ஆண்டும் இந்த அளவு வளர்ச்சி இருக்கும். ஆனால் வருகிற ஆண்டுகளில் 9 முதல் 10 சதவிகித வளர்ச்சியை நோக்கி இந்தியா நடைபோடும்.
வறுமையில் வாடும் பல லட்சம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாக இந்த வளர்ச்சி அமையும்.
சௌதி அரேபியாவுக்கும் இந்தியாவுக்குமான உறவை மேம்படுத்த நிறைய வழிகள், வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவின் உள்கட்டமைப்பு, உற்பத்தித் துறையில் முதலீடு செய்யும் வாய்ப்பு சௌதிக்கு அதிகம் உள்ளது. மேலும் மருத்துவம், சுற்றுலாத் துறையிலும் சௌதியின் முதலீடுகளை வரவேற்கிறோம்.
அதே நேரம் இந்தியாவும் ஐடி உள்ளிட்ட துறைகளில் சௌதி அரேபியாவுக்கு உதவ தயாராக உள்ளது. வங்கிகள், தொலைத் தொடர்புத் துறை மற்றும் மருந்தியல் துறைகளில் சௌதி அரேபியாவில் முதலீடு செய்ய இந்தியா தயாராக உள்ளது," என்றார் மன்மோகன் சிங்.












Click it and Unblock the Notifications