மதுரை மாநகராட்சியை எதிர்த்து அதிமுகவும் போராட்டம்- தேமுதிகவுடன் போட்டி
சென்னை: மதுரை மாநகராட்சியைக் கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக தேமுதிக அறிவித்துள்ள நிலையில் தற்போது அதிமுகவும் போராட்டத்தை அறிவித்துள்ளது.
மதுரை மாநகராட்சியில் சொத்து வரி விதிப்பை பல மடங்கு அதிகரித்துள்ளதை எதிர்த்து தேமுதிக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இந் நிலையில் அதிமுக சார்பில் மதுரை மாநகராட்சியை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாக அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் அறிவித்துள்ளார். ஆனால் போராட்டத்திற்கான காரணம் வேறு.
இதுகுறித்து கொடநாட்டில் ஓய்வெடுத்து வரும் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
எனது ஆட்சிக் காலத்தில், மதுரை மக்களின் நலன் கருதியும், பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டும், வைகை இரண்டாவது குடிநீர்த் திட்டம், புதிய பாலம் அமைக்கும் திட்டம், புதிய மின் விளக்கு அமைக்கும் திட்டம், குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம் உட்பட பல்வேறு திட்டப் பணிகளை 7 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றும் பொருட்டு ஒரு கருத்துரு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.1,477 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
ஆனால், கடந்த 4 ஆண்டு காலமாக திமுக ஆட்சியில் எந்தப் பணியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
மதுரை மாநகராட்சி பிரசவ மருத்துவமனைகளிலும், மருந்தகங்களிலும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகின்ற சூழ்நிலையில் பணியாளர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதாலும், போதிய அளவு மருந்து, மாத்திரைகள் இல்லாததாலும் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கப்பட்டு இருக்கின்றனர். மாநகராட்சி முழுவதும் சுகாதாரக்கேடு நிலவுகிறது.
எனவே மதுரை மாநகர மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத திமுக அரசையும், மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்தும், மதுரை மாநகராட்சியின் வளர்ச்சி திட்டங்களையும், அடிப்படை தேவைகளையும் உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் அதிமுக மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் நாளை (புதன்கிழமை) மீனாட்சி பஜார் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டம் ஜெயலலிதா பேரவை செயலாளர் நயினார் நாகேந்திரன் தலைமையிலும், மதுரை மாநகர் மாவட்டக்கழக செயலாளர் செல்லூர் ராஜூ முன்னிலையிலும் நடைபெறும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி!












Click it and Unblock the Notifications