தமிழகத்தில் ஜனநாயகம் செத்துப் போய் விட்டது-வைகோ
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி செங்கோட்டையில் கட்சிக் கொடியேற்றி வைத்து அவர் பேசுகையில்,
தமிழகத்தில் தற்போதைய ஆட்சியில் ஜனாநாயகம் செத்து போய்விட்டது. பண நாயகம் செழித்தோங்கி உள்ளது. ஓட்டுக்கு ஆயிரம் முதல் ஐயாயிரம் கொடுக்கிறார்கள்.
50 கோடி கொடுத்து பதவிக்கு வந்தவர்கள் மக்களுக்கு என்ன செய்வார்கள், கொள்கைக்காக போட்டியிடுவதில் வெற்றி, தோல்வி சகஜம்.
தமிழகத்தில் வன்முறை வந்து விடக்கூடாது. கேரளா, ஆந்திரா, சட்டீஸ்கரில் பேராபத்து வந்து விட்டது. அரசு மீது இளைஞர்கள் நம்பிக்கை இழந்து விட்டால் பேராபத்து வந்து விடும்.
வடக்கே இருக்கும் விபரீதம் இங்கு வந்து விடக்கூடாது. லட்சம் பேர் தேவையில்லை. ஆயிரம் பேர் போதும். வன்முறைக்கு மதிமுக ஒரு போதும் துணை போகாது. 16 ஆண்டுகால வரலாற்றில் மதிமுக ஒரு வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டது கிடையாது.
கேரள அரசை கண்டித்து மே 28ம் தேதி 13 இடங்களில் சாலைகளில், கேராளவிற்கு கொண்டு செல்லும் பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை மதிமுக மறிக்கும்.
குமரி மாவட்டம் நெய்யாற்றிலும் தண்ணீர் தர மறுப்பதால் அங்கு 28 ஆயிரம் ஏக்கர் நிலம் தரிசாக கிடக்கிறது. கரூர் மாவட்டத்தில் பாம்பாறு தண்ணீர் வராததால் 80 ஆயிரம் ஏக்கர் விலைநிலங்கள் தரிசாக உள்ளன.
கேரளா உதவியின்றி தமிழகம் வாழ முடியும். ஆனால் கேரள மக்கள் தமிழகத்தை நம்பிதான் வாழ வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆகவே தண்ணீர் தர மறுப்பது நியாயமற்ற செயல்.
தமிழக மக்கள் நலனுக்காக எதையும் சந்திக்க தயாராக இருக்கிறேன் என்றார்.
பொன்னாடை போர்த்திய காங். தலைவர்
இந்தக் கூட்டத்தின்போது செங்கோட்டை நகர காங்கிரஸ் கட்சி தலைவர் ஜோதிலிங்கம் வைகோவுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார். இதனால் லேசான சலசலப்பு ஏற்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்













Click it and Unblock the Notifications