சேலத்தில் பிரபல ரவுடி பட்டப்பகலில் வெட்டிக்கொலை!
சேலம்: சேலத்தில் பிரபல ரவுடி ரவுடி பட்டப்பகலில், நடுவீதியில் மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தது.
சேலம் தாதகாப்பட்டி ஜவஹர் நகரை சேர்ந்தவர் மோகன் (30). ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி.
மோகன் மற்றும் கூட்டாளி சேட்டு ஆகிய இருவரும், மத்திய சிறையில் அடைக்கப்ட்டுள்ள மற்றொரு கூட்டாளியான வளத்திகுமாரை சந்தித்து விட்டு வந்து கொண்டிருந்தனர்.
மத்திய சிறைக்கு அருகே வந்து கொண்டிருந்த போது மூன்று மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணிந்து வந்த ஆறு பேர் மோகனை வழிமறித்தனர்.
யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் மோகனை சூழ்ந்துகொண்டு, சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
உடல் முழுவதும் படுகாயங்கள் அடைந்த மோகன், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். உடனே, ஹெல்மெட் அணிந்த கும்பல் அந்த இடத்தில் இருந்து தப்பித்து ஓடிவிட்டது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அங்கு வந்து மோகனின் உடலை கைப்பற்றினர். ரவுடிகள் முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications