ஏப்ரலில் ஊதிய உயர்வை அறிவிக்கிறது இன்போசிஸ்
மும்பை: இந்தியாவின் நம்பர் டூ ஐடி நிறுவனமான இன்போசிஸ், தனது ஊழியர்களுக்கு வருகிற ஏப்ரல் மாதம் ஊதிய உயர்வை அறிவிக்கவுள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தின் அனைத்துப் பிரிவு ஊழியர்களுக்கு ஏப்ரலில் ஊதியம் உயர்த்தப்படுகிதாம்.
கடந்த ஆண்டு பொருளாதார மந்த நிலையைக் காரணம் காட்டி இன்போசிஸ், டாடா கன்சல்டன்சி நிறுவனம், விப்ரோ ஆகியவை தங்களது ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை தள்ளிப் போட்டிருந்தன.
இருப்பினும் கடந்த அக்டோபர் மாதம் இன்போசிஸ் நிறுவனம் ஊதிய உயர்வை அறிவித்தது.
இந்த நிலையில் வருகிற ஏப்ரல் மாதம் ரெகுலரான ஊதிய உயர்வை இன்போசிஸ் அறிவிக்கிது. இதுகுறித்து இன்போசிஸ் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் மாதம் ஊதிய உயர்வை அறிவிக்க பரிசீலித்து வருவது உண்மைதான். வருகிற ஆண்டில் பிசினஸ் சிறப்பாக இருக்கும் என நம்புகிறோம். எனவே ஏப்ரல் மாதம் ஊதிய உயர்வை அறிவிக்க திட்டமிட்டுள்ளோம்.
நிறுவனத்தின் அனைத்து மட்டத்திலும் ஊதிய உயர்வு இருக்கும். எந்த அளவுக்கு உயர்த்துவது என்பது ஏப்ரல் மாதம் முடிவு செய்யப்படும் என்றார்.
இருப்பினும் 8 முதல் 12 சதவீத அளவுக்கு ஊதிய உயர்வு இருக்கலாம் எனத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications