லாரி வாடகை உயர்வு-அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும்!

பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதை அடுத்து, உடனடியாக எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது.
சென்னையில் டீசல் லிட்டருக்கு ரூ. 2.80 கூடுதலாகி இருப்பதால், ஆட்டோக்கள், லாரிகள், ஆம்னி பஸ்கள் என பல வாடகை வாகனங்களும் கட்டணத்தை அதிகரித்து வருகின்றனர்.
குறிப்பாக டிப்பர் லாரி உட்பட சரக்கு போக்குவரத்துக்கு பயன்படும் லாரிகளின் வாடகை 20 சதவீதம் உயர்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாயின.
'ஜனவரி மாதம் லாரியின் 4 டயர்கள் விலை ரூ.52 ஆயிரமாக இருந்தது. அவை இப்போது ரூ.60 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இத்துடன் லாரிக்கான ஆயில் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. டீசலும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் கணக்கிட்டு கட்டணத்தை 20 சதவீதம் உயர்த்தியிருப்பதாக லாரி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு சந்தைக்கு தினமும் ஏராளமான லாரிகளில் காய்கறிகள் பெங்களூர், வேலூர், ஆந்திரா, திருச்சி, ஆரணி முதலிய இடங்களில் இருந்து காய்கறிகள் மலை போல வந்து இறங்குகின்றன.
அதுபோல திருச்சி, கோவை, மதுரை, நெல்லை முதலிய இடங்களுக்கும் வெகு தூரத்தில் இருந்து அந்த பகுதிகளில் கிடைக்காத காய்கறிகள், வெங்காயம் முதலியவை வருகின்றன.
அரிசியும் இப்படி தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான லாரிகளில் ஆங்காங்கே வெளியிடங்களில் இருந்து வருகிறது.
இந்நிலையில், லாரி வாடகை அதிகரித்திருப்பதால், காய்கறி, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications